×

உக்ரைன் பாதுகாவலர் குடும்பத்துக்கு ராம்சரண் உதவி

ஐதராபாத்: தனக்கு பாதுகாவலராக இருந்த உக்ரைனை சேர்ந்தவருக்கு ராம்சரண் உதவி செய்திருக்கிறார்.ஆர்ஆர்ஆர் படத்தின் ஷூட்டிங் கடந்த ஆண்டு உக்ரைனில் நடந்தது. கீவ் நகரில் படப்பிடிப்பு நடந்தபோது, அந்த நகரை சேர்ந்த ரஸ்டி என்பவர் ராம்சரணுக்கு பாதுகாவலராக செயல்பட்டார். இதில் அவர்கள் நட்புடன் பழகினர். இந்தியாவுக்கு வந்த பிறகும் ரஸ்டியுடன் அவ்வப்போது ராம்சரண் பேசி வந்தார். இந்நிலையில், திடீரென ரஷ்யா, உக்ரைன் மீது தாக்குதல் நடத்தியது. இதை அறிந்து ராம்சரண் அதிர்ச்சியடைந்தார். அப்போது அவர் ரஸ்டியுடன் போனில் பேசியபோது, தான் உக்ரைன் ராணுவத்தில் சேர்ந்துவிட்டதாக ரஸ்டி தெரிவித்தார். ஏதேனும் உதவி தேவையா என ராம்சரண் கேட்டிருக்கிறார். எதுவும் வேண்டாம் என ரஸ்டி கூறியுள்ளார். ஆனாலும் மனம் பொறுக்காத ராம்சரண், ரஸ்டியின் குடும்ப சூழலை அறிந்திருந்ததால், அவரது மனைவிக்கு பணம் அனுப்பி வைத்திருக்கிறார். இதுகுறித்து ரஸ்டி கூறும்போது, ‘எனது நாட்டுக்காக போரிட தயாராகிவிட்டேன். இந்த நிலையில் நண்பர் ராம்சரண் எனது குடும்பத்துக்கு உதவியுள்ளார். அவருக்கு நான் கடமைப்பட்டிருக்கிறேன்’ என்றார்….

The post உக்ரைன் பாதுகாவலர் குடும்பத்துக்கு ராம்சரண் உதவி appeared first on Dinakaran.

Tags : Ramsaran ,Ukraine ,Hyderabad ,
× RELATED உக்ரைனின் கார்கிவ் நகரில் அமைந்த முதல் ‘பங்கர் பள்ளி